துருக்கியில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட உரிமையாளரின் வருகைக்காக நாய் 6 நாட்கள் மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி மாநிலம் வடகிழக்கில் அமைந்திருக்கும் ராப்சன் நகரில் வசித்து வருபவர் சென்டாக். இவர் போன்கக் என்ற நாயை வளர்த்துவந்தார். இவருக்கு கடந்த 14ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆம்புலன்சுக்கு பின்னாலேயே ஓடிய அந்த நாய் தொடர்ந்து அவர் அனுமதிக்கப்பட்ட வாசலிலேயே காத்திருந்தது. பின்னர் அவருக்கு ஆறு நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்டது. அந்த நாய் ஒவ்வொரு நாளும் காலையிலும் மருத்துவமனைக்கு வெளியே வந்து உரிமையாளரின் வருகைக்காக காத்திருந்தது.
அவரின் மகள் பலமுறை அந்த நாயை வீட்டிற்கு கொண்டு விட்டாலும் மீண்டும் அந்த மருத்துவமனைக்கு ஓடி வந்துள்ளது. இதுகுறித்து அந்த மருத்துவமனையின் இயக்குநர் கூறுகையில் அந்த நாய் யாருக்கும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை, ஒவ்வொருவருக்கும் அந்த நாய் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என தெரிவித்தார். ஆறு நாள் சிகிச்சை முடிந்து வெளியே வந்த சிமல் சென்டர் பார்த்ததும் அந்த நாய் ஆவலுடன் அவரை கட்டித் தழுவியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சென்டர் மனிதர்களைப் போன்று எங்களுடன் இது நெருக்கமாக உள்ளது, இது மகிழ்ச்சிப்படுத்தும் என நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.