Categories
மாநில செய்திகள்

நாளை பணிக்கு வாருங்கள்….!! விடுமுறை ரத்து-போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்….

அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை விடப்படுவதாக இருந்த விடுமுறை ரத்து என்று தெரிவித்துள்ளார். 
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியின் சீலாம்பூர், ஜாப்ராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்தது. இப்போது போராட்டங்கள் குறைந்து வட மாநிலங்களில் மீண்டும் அமைதி நிலை திரும்பி வருகிறது.
இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகா வரும் 23-ம் தேதி தி.மு.கவும் அதன் தோழமை கட்சிகளும் சேர்ந்து சென்னையில் பேரணி நடத்துவதற்கு முடிவானது.இந்நிலையில், சென்னை அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் நாளை விடுமுறை எடுப்பதற்கு போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது.
Related image
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தற்போது வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை விடப்படுவதாக இருந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும், எனவே ஊழியர்கள்  நாளை வழக்கம்போல் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்றும் விடுமுறை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |