கவுண்டமணி வில்லனாக நடித்த படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். அதன்படி,
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்: 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும். இந்த படத்தில் கவுண்டமணி ,செந்தில், மனோரமா, கோவை சரளா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கவுண்டமணி தர்மலிங்கம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பாட்டுக்கு நான் அடிமை: 1990ல் வெளிவந்த திரைப்படம் ‘பாட்டுக்கு நான் அடிமை’. இந்த படத்தில் ரேகா, டிஸ்கோ சாந்தி, கவுண்டமணி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கவுண்டமணி காமெடி கலந்த வில்லனாக நடித்திருந்தார்.
ஞானப்பழம்: பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘ஞானப்பழம்’. இந்த படத்தில் வினிதா, சுகன்யா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
16 வயதினிலே: இந்த படத்தில் ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவுண்டமணி மற்றும் பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் கவுண்டமணி, ரஜினியுடன் சேர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ரகசிய போலீஸ்: சரத்குமார் நடிப்பில் வெளியான இந்த படத்தில் ராதிகா, செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதில் சரத்குமாருக்கு வில்லனாக இவர் நடித்திருந்தார்.
மேலும், கவுண்டமணி பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.