பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக இருக்கும் சந்தானம், யோகி பாபு, சூரி, வடிவேலு ஆகியோர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது பிரபல காமெடி நடிகர் சதீஷும் இடம் பெற்றுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ரா நடிக்க உள்ளார். மேலும் அஜித் அசோக் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெற உள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.