பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தம் தான் வரைந்த ஓவியத்தை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பரிசாக அளித்துள்ளார் .
தெலுங்கு திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக கலக்கி வருபவர் பிரம்மானந்தம் . தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் மொழி, சேட்டை, வாலு போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . திரையுலகில் காமெடி நாயகனாக அனைவரையும் சிரிக்க வைத்த பிரம்மானந்தம் தற்போது ஓவியத் திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார் . இவருக்கு பென்சில் வரைபடம் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்றாம் . பொழுதுபோக்கிற்காக இவர் வரைந்த ஒரு ஓவியம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது .
THE MOST PRICELESS GIFT I RECEIVED FROM OUR BELOVED
BRAHMANANDAM GARU.
45 DAYS OF WORK .
HAND DRAWN PENCIL SKETCH . THANK YOU 🙏🏽 pic.twitter.com/DNvGd3iv3B— Allu Arjun (@alluarjun) January 1, 2021
தன் கைப்பட வெங்கடாசலபதி புகைப்படத்தை அச்சு அசலாக வரைந்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அதை பரிசாக அளித்துள்ளார் . இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் வெளியிட்டு ‘பிரம்மானந்தம் அவர்களின் விலைமதிப்பில்லாத பரிசு. 45 நாட்கள் கையினால் வரைந்த பென்சில் வரைபடம். மிகவும் நன்றி’ என பதிவிட்டுள்ளார் .தற்போது இணையத்தில் இந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு நடிகர் பிரம்மானந்தத்தை பலரும் பாராட்டி வருகின்றனர் .