Categories
இந்திய சினிமா சினிமா

பலரை சிரிக்க வைத்த காமெடி நடிகர் மரணம்…சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்…!

400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த காமெடி நடிகரின் மரணம் திரைஉலகத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா  தொற்று இல்லாமல் உடல்நலக்குறைவால் பலர் இறந்துள்ளனர். அண்மையில் நடிகர் ரிஷி கபூர், இம்ரான் கான் என சினிமா பிரபலங்கள் இறந்துள்ளனர். இந்த நிலையில் ஹிந்தியில் 400க்கும் அதிகமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ஜக்தீப். இவர் மும்பை பந்தரா பகுதியில் உள்ள தனது வீட்டில் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

81 வயதான இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் போன்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 2012ல் வெளியான படத்தில் கடைசியாக நடித்தார். இவரின் மரணத்தால் அவரது மனைவி பெரும் துயரத்தில் உள்ளார். ரசிகர்கள் மற்றும் திரையுல பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இவரின் இறுதி சடங்கு இன்று காலை நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |