தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் 22-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தெலுங்கானா மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளது. தெலுங்கானா அரசு நாளை முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை அனைத்து கடைகளும் இயங்கும் என்றும், மற்ற நேரங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.