Categories
தேசிய செய்திகள்

வரும் 18 ஆம் தேதி…. 4 மணி நேரம் ரயில் மறியல் போராட்டம்…. விவசாயிகளின் அடுத்த ஷாக்…!!

விவசாயிகள் அடுத்தகட்டமாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசு வேளாண்சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் பிரபலங்கள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் 78 ஆகி நாட்களாகி நிலையிலும் பேச்சுவார்த்தையில் இதுவரை பெரிய சமரசம் ஏற்படவில்லை.

இந்நிலையில் வேளாண்சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற்றால் மட்டுமே திரும்பிச் செல்வோம் என்று திட்டவட்டமாக கூறிய விவசாயிகள் சில தினங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் அடுத்த கட்டமாக 4 மணி நேரம் ரயில் மறியலில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |