Categories
மாநில செய்திகள்

விரைவில் 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்… விரைவில் அறிவிப்பு…!!!

பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 10-ம் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிமுறைகள் முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இதை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிமுறைகள் முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்பீடு முறைகளுடன் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் முதல்வரின் ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |