Categories
மாநில செய்திகள்

விரைவில்… வருகிறது அதிவேக “பாரத் நெட்”… இவ்ளோ ஸ்பீட்லயா…?

இனி கிராமங்களிலும் இன்டர்நெட் சேவை என்பது சிறப்பாக கிடைக்க வழிவகை செய்து உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மாநாடு கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். மேலும் அந்த மாநாட்டில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளையும் அதிவேக இணையத்தின் வழியே இணைக்கும் பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் திட்டம் 18 மாதங்களில் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் இணைய வழி மாநாட்டில் கலந்துகொண்ட உதயகுமார் பேசிய போது  தமிழகத்தின் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளிலும் 1 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் இணைய வசதி கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அதாவது கிராமங்களின் மக்கள் இண்டர்நெட் சேவையை பெறுவதற்கு மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் வீட்டில் இருந்து பணி புரியும் மக்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இனி இத்தகைய சிரமம் இருக்காது என்றும் இணைய சேவையை இரட்டிப்பாக உயர செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |