Categories
டெக்னாலஜி பல்சுவை

விரைவில் வரப்போகிறது… “புதிய ஆப்பிள் ஐபோன்”… இதன் சிறப்பம்சம் என்ன…?

முன்னணி மொபைல் போன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 13 வரிசையில் புதிய போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், அதிக விலை கொண்டவை. நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டவை. இந்த போன் ரகசியகாப்பு தன்மை காரணமாக, வசதி படைத்தவர்கள் பலரும் அதை வாங்க விரும்புவர்.

தற்போது ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 13 என்ற புதிய வரிசையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த போன்களில், ஒரு புதிய ‘நோட்டிபிகேசன்’ வந்தால், ஒட்டு மொத்த மொபைல் போன் திரையும் ஒளிராது. அதற்கு பதிலாக, ஒரு சிறிய ‘பாப் அப்’ மட்டுமே திறக்கும்.

திரை லாக் செய்யப்பட்டிருந்தாலும், கடிகாரம், பேட்டரி ஐகான்கள் எப்போதும் தெரியும் வகையில் புதிய போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முறைப்படியான அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.

Categories

Tech |