Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்கு திறப்பு எப்போது ? ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து பதில் …!!

திரையரங்கை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கொரோனா பெற்றுந்தொற்று காரணமாக நாடு முழுதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட வந்த நிலையில், நாடு முழுவதும் திரையரங்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அனால் தமிழகத்தில் இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனாலும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தன.

இது குறித்து தமிழக அரசும் பல்வேறு அறிவிப்பை வெளியிட்டு வந்தது. இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு சட்டமன்றத்தில் இறுதியாக சினிமாவைப் பற்றி தான் பேசினார். அரசியல் பற்றி படித்ததே திரையரங்கில் தான். விரைவில் திரையரங்கு குறித்த நல்ல முடிவு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |