தேனியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளதால் அதிமுகவில் பிரச்சினை வெடித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இதையடுத்து அரசியல் காட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சகிலா விடுதலைக்குப் பின்னர் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தேனி ஆண்டிப்பட்டியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டரில் “தமிழ் நாட்டை வழிநடத்த வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர், எங்களின் ராஜமாதாவே வருக வருக! என குறிப்பிடபட்டுள்ளது. இதனால் அதிமுகவில் பெரும் பிரச்சினை வெடித்துள்ளது.