அண்மையில் புதுச்சேரியில் கரையை கடந்த நிவர் புயலால் தமிழகத்திற்கு பெருமளவு பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், நல்ல மழை கிடைத்தது. வடகிழக்கு பருவமழை ஏறக்குறைய சராசரி அளவை எட்டும் அளவிற்கு தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்து உள்ளது. இதனிடையே தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது என்று குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி வரும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஒருவேளை இது புயலாக மாறும் பட்சத்தில் இதற்க்கு புரெவி” புயல் என்று அழைக்கப்படும் என சொல்லப்படுகின்றது.