தளபதி65 திரைப்பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் தளபதி65 படத்தில் நடித்து வருகிறார். இதற்காக தளபதி விஜய் ஜார்ஜியா சென்றுள்ளார்.
இந்நிலையில் தளபதி65 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ள அபர்ணா தாஸ் கேரள புடவையில் ஜொலிக்கும் புகைப்படங்களை அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
https://twitter.com/AparnaDasOff/status/1380392285502799878