விஜய்யின் அடுத்த பட பூஜையில் மகேஷ் பாபு கலந்துகொள்ளப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு மற்றும் செல்வராகவன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதனையடுத்து, விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். அப்படத்தின் பூஜை அக்டோபர் 15-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது.
முதலில் இந்த படத்தை மகேஷ் பாபுவிற்கு தான் உருவாக்கியதாகவும் அந்த கதையை கேட்டவுடன் மகேஷ்பாபு, இந்த படத்திற்கு என்னை விட விஜய் தான் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் வம்சி இடம் தெரிவித்திருக்கிறார். எனவே, ஹைதராபாத்தில் நடைபெறும் இந்த படத்தின் பூஜையில் மகேஷ்பாபுவும் கலந்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.