Categories
சினிமா தமிழ் சினிமா

தாய், தந்தை மீதே வழக்கு தொடர்ந்துள்ள தளபதி விஜய்… பெரும் அதிர்ச்சி..!!!

தளபதி விஜய் தனது தாய், தந்தை உள்பட 11 பேர் மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியிருந்தார். இந்த கட்சியில் தலைவராக பத்மநாபனும், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளராக ஷோபாவின் பெயரும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தளபதி விஜய் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது பெயரை இதுபோன்ற பயன்படுத்தி கூட்டங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சந்திரசேகர், ஷோபா தரப்பிலிருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் தளபதி விஜய் தரப்பிலிருந்து யாரும் ஆஜராகாததால் இந்த வழக்கை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இந்நிலையில் நடிகர் விஜய் தனது தாய், தந்தை உட்பட 11 பேர் மீது தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என வழக்கு தொடர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |