தளபதி விஜய் ஆட்டோகிராப் குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்கான முடிவுகள் வரும் மே2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்த விஜய்யின் வீடியோ தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. இதே போல் விஜய்யின் பழைய வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் விஜய் தனது முதல் ஆட்டோகிராஃப் பற்றி கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் விஜய் தற்போது தளபதி65 படத்திற்காக ஜார்ஜியா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/Sridhar_Sw1/status/1380766917032509450