கல்வி அலுவலர் தலைமையில் பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளின் கணக்கெடுக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பாக 6 வயது மற்றும் 19 வயது வரை இருக்கும் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் போன்றோர்களை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி வருகின்ற 31-ஆம் தேதி வரை கொரோனாவின் வழிகாட்டு விதி முறைகளை கடைபிடித்து மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் படப்பை அருகாமையில் இருக்கும் நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம் உத்தரவின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் மாவட்டத்தின் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கு உதவி திட்ட அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து முன்பாகவே கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது அவசியம் பற்றி பெற்றோர்களிடம் மற்றும் மாணவர்களிடமும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.