Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட்டில் ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை – கே. பாலகிருஷ்ணன் விமர்சனம்..!!

மத்திய பட்ஜெட் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பின் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் பட்ஜெட் குறித்து கூறுகையில், ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை. பட்ஜெட்டில் ஆக்கபூர்வமான திட்டம், வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த அறிவிப்பு இல்லை. தனியார்மயம் நோக்கி செல்வது தான் இந்த பட்ஜெட் என்று என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |