மது போதையில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின்கம்பத்தில் ஏறி வயரை பிடித்து மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியையடுத்த அதிபெரமனுர் பகுதியில் வசித்து வந்தவர் தினகரன். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நன்றாக குடித்துவிட்டு குடிபோதையில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அருகில் இருந்த மின் கம்பம் ஒன்றில் ஏறி என்ன செய்கிறோம் என தெரியாமல் போதையில் தனது கைகளால் அதில் இருந்த வயரை பிடித்துள்ளார்.
இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க முதலுதவி கொடுக்கப்பட்ட பின்பு மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே தினகரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.