கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நகராட்சி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பாக துப்புரவு தொழிலாளர்கள் சங்கம், சி.ஐ.டி.யு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் செயலாளரான எம்.எம். சரவணன் மற்றும் பொருளாளர் எஸ். ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு தாலுகா செயலாளர் ஜாபர் சாதிக் மற்றும் கூட்டமைப்பு செயலாளரான ஜோதி தொடங்கி வைத்து பேசியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர் மற்றும் டி.பி.சி தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு உத்தரவின்படி 557 ரூபாய் வழங்க வேண்டும் எனவும், தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்தம் என்ற பெயரில் தனியாரிடம் ஒப்படைக்க கூடாது எனவும், கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த ஊக்கத் தொகைகளை வழங்குமாறும், தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் மற்றும் ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு அனைத்து பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி உள்ளனர்.