Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

படியில் தொங்கிய படி பயணம்…. ஆபத்தை உணராத மாணவர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

பள்ளிகள் விடும் நேரத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி பகுதியில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இதில் நாற்றம்பள்ளி உள்பட பல பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் பள்ளிகள் முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக நாட்டறம்பள்ளி பேருந்து நிறுத்தத்துக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்த மாணவ-மாணவிகள் திருப்பத்தூர், பச்சூர் நோக்கி செல்லும் ஒரு தனியார் பேருந்தில் ஏறி உள்ளனர்.

இதனையடுத்து பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிய படி ஆபத்தான நிலையில் பயணம் செய்துள்ளனர். அதனால் பள்ளிகள் விடும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |