திருமண மண்டபத்தில் வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மருத்துவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சார்பாக சமுதாயக்கூடம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் எஸ்.வி திருமண மண்டபத்தில் வைத்து சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஐந்து வகையான உணவுகள், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பூ, பூமாலை மற்றும் சீர்வரிசை ஆகியவை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து டாக்டர் செல்வி, ஷர்மிளா மற்றும் சௌந்தர்யா ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கி உள்ளனர். மேலும் இதில் கீரைகள், ஊட்டச்சத்து உணவுகள்,காய்கறிகள், சிறு தானியங்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை கண்காட்சியாக வைத்து அதன் சிறப்புகளையும், தாய்ப்பால் சிறப்புகளையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.