Categories
உலக செய்திகள்

”ஆபீஸுக்கு வராதீங்க” ஊழியர்களை அறிவுறுத்தும் நிறுவனங்கள் …!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் வராமல் வீட்டில் இருந்தே பார்க்கும் படி பல நிறுவனங்கள் அறிவுத்துத்தியுள்ளது.

ட்விட்டர் அமெரிக்காவில் இருக்கும் தனது சியாட்டில் அலுவலகத்தை தூய்மை படுத்துவதற்காக மூடியிருக்கிறார்கள்.கொரோனா பாதிப்பு காரணமாக ஐடி நிறுவனங்கள், அவங்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கும் படி சொல்லி இருக்கிறார்கள். அந்த வகையில் கொரோனா பாதிப்பு காரணமாக சியாட்டலில் இருக்கக்கூடிய ட்வீட்டர் அலுவலகத்தையும் ட்வீட்டர் மூடி சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் எல்லாரையும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

ட்வீட்டர் சியாட்டல் அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என்ற அறிகுறி இருப்பதால் அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகுதான் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும். இதற்கிடையே மேலும் இருக்கக்கூடிய மற்ற ஊழியருக்கு  கொரோனா வைரஸ் பாதிக்கக்கூடாது என்பதற்காக எல்லா ஊழியர்களையும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் படி ட்வீட்டர் சொல்லி இருக்காங்க.

அதேபோல மற்ற ஊழியர்கள் வேலைக்கு வருவதற்கு முன் அலுவலகம் தூய்மையாய் இருக்க வேண்டும் என்பதற்காக ட்வீட்டர் சியாட்டல் அலுவலகத்தை முழுமையாக தூய்மை படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது. ட்வீட்டர் மட்டுமில்லை கூகிள் , மைக்ரோசாப்ட் ஃ , பேஸ்புக் என எல்லோரும் அவங்களோட ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கும் படி சொல்லி உள்ளார்கள்.அதேபோல அவங்க வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பட்சத்தில் அலுவலகத்தை தூய்மையாகவும் சுத்தமாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |