Categories
அரசியல் மாநில செய்திகள்

வல்லரசு நாடோடு ஒப்பீடு… போராடும் எடப்பாடி அரசு …. அசத்தலாக பேசிய விஜயபாஸ்கர் …!!

விமர்சனத்தை தவிருங்கள், ஆக்கபூர்வமான கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,  210 நாடுகளுக்கும் மேலாக இந்த நோய் இருக்கின்றது. வல்லரசு நாடுகளே இன்று விழிபிதுங்கிக் கொண்டு இருக்கின்றது. நாம் முதலமைச்சர் தலைமையில் மிகக் கடுமையாக போராடி பணி செய்து  கொண்டு இருக்கின்றோம்.  பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியும், நடுநிலையாளர்களுக்கு தெரியும், விமர்சகர்களுக்கு தெரியும்.  எந்த அளவு அரசு மிகக் கடுமையாக இந்த பணியை மேற்கொண்டு இருக்கிறது.

ஒரு நாள், ரெண்டு நாள், ஒரு வாரம் அல்ல…  ஜனவரி மாதத்தில் இருந்தே தயார் நிலையில் இருந்து, பிப்ரவரி மாதத்தில் தொடங்கி, நமக்கு பாதிப்பு வந்த நாள் முதல் இன்று வரை 100 நாட்களுக்கு மேலாக, 4ஆவது மாதத்தில் , 5ஆவது மாதத்தில் தொடர்ந்து ஓய்வின்றி,  உறக்கமின்றி பணியாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.நீங்கள் சொல்கின்ற ஒரு வார்த்தைதான் தொடர்ந்து அவர்கள் பணி செய்வதற்கு தூண்டுகோலாக இருக்கும். விமர்சனத்தை தவிருங்கள், ஆக்கபூர்வமான கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Categories

Tech |