Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பண்டை விமர்சனம் செய்வது தவறு” – ஷிகர் தவான்!!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் சொதப்பியதால் நெட்டிசன்கள்  விமர்சனம் செய்து  வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக  ஷிகர் தவான் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழந்து 358 ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழந்து 359 ரன்கள் குவித்து வெற்றியை பறித்தது.இந்த போட்டியில் டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக  ரிஷப் பண்ட் களமிறங்கினார். ரிஷப் பண்ட், அஸ்டான் டர்னர் உட்பட 3 பேரின் விக்கெட்டுகளை தவறவிட்டார். இதனால் தான் இந்திய அணி தோல்வியடைந்ததாக  சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ரிஷப் பண்டை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி வீரர் ஷிகர் தவான், டோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பண்டை விமர்சனம் செய்வது தவறு எனவும், ஸ்டெம்பிங்கை தவற விட்டது வருத்தம் தான் இருந்தாலும் வளர்ந்து வரும் இளம் வீரரான ரிஷப் பண்டை  இப்போதே விமர்சிப்பது முறையற்ற செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |