மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் ஜனவரி மாதத்திலும் நீட்டித்துள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஆய்வு செய்ய அமைச்சர்களுக்கும், பாதித்த பயிர்களை கணக்கிட வேளாண் வருவாய் துறையினருக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் முதல்வர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.