சாலை விபத்தில் உயிரிழந்த மின்வாரியத்துறை ஊழியர் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் சுவாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மின் வாரிய கணக்கு எடுப்பவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 16.5.2019 – ஆம் தேதியன்று இவர் செஞ்சேரி பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி சுவாமிநாதனின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் சுவாமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து சுவாமி நாதனின் மனைவியான கவுசல்யா இழப்பீடு கேட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்நிலையில் பாரத வங்கி காப்பீடு நிறுவனம் 37 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்க நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்பிறகு நீதிபதியான சதீஷ் என்பவரின் முன்னிலையில் கவுசல்யாவிற்கு 37 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டுள்ளது.