பட வெளியீட்டில் தனுஷ் மற்றும் விஷால் மோதிக் கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி வருகிறது
திரைப்படத்துறையில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் தனுஷ் மற்றும் விஷால். விஷால் எம்எஸ் ஆனந்த் இயக்கும் புதிய படமான சக்ராவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோசங்கர், மனோபாலா, ரெஜினா, கேஆர்விஜயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குபவர் விஷால்.
விஷால் நடிக்கும் சக்ரா திரைப்படம் படபிடிப்பின் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் மே 1ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் எனவும் தகவல் தெரியவந்துள்ளது. அதே மே 1ஆம் தேதி தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படமும் வெளியாக உள்ளது. இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் விஷால் மற்றும் தனுஷ் இடையே பட வெளியீட்டில் மோதல் இருக்கும் என தெரிவிக்கின்றனர்.