கொரோனா விஷயத்தில் அமெரிக்கா மிகப் பெரிய தவறிழைத்து விட்டது என BARDA வின் முன்னாள் இயக்குனர் புகார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்று 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடி வரும் இந்த வைரசை அந்நாட்டு அரசு நினைத்திருந்தால் முன்பே கண்டுபிடித்து தடுத்திருக்க முடியும் என்றும்,
அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தவறு செய்து விட்டது என்றும், இந்த தவறுகள் அனைத்திற்கும் அந்நாட்டு அதிபர் டிரம்ப் தான் காரணம் எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பயோமெடிக்கல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குனர் ரிக் பிரைட் இதுகுறித்து பரபரப்பு புகார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
கடந்த ஜனவரி மாதமே தான் கொரோனா குறித்த எச்சரிக்கையை அமெரிக்க அரசுக்கு விடுத்ததாகவும், அமெரிக்க சுகாதார துறையிடம் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்ததாகவும் ஆனால் அதனை அமெரிக்க சுகாதாரத்துறை அலட்சியப்படுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார்.
எனது கருத்தை அலட்சியம் செய்ததன் விளைவாகவே இன்று அமெரிக்காவில் இத்தனை உயிர்கள் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்தார். 2016-ம் ஆண்டு BARDA வின் முக்கிய இயக்குனர் பதவியில் இருந்த என்னை அமெரிக்காவின் தேசிய சுகாதார துறையின் முக்கியமற்ற பதவிக்கு தன்னை மாற்றியதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தவறுகள் மூலம் அமெரிக்கா whistleblower production act என்ற சட்டத்தை மீறி உள்ளதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.