பாலிவுட் நடிகரான விக்கி கௌஷல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தி நடிகரான விக்கி கௌஷல் மற்றும் சாரா அலி கான் இணைந்து நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடக்கிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஜெய் சிங் யாதவ் என்ற நபர் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் தன் வாகனத்தின் எண் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்திருக்கும் புகாரில், இந்தூரில் நடிகர் விக்கி கவுசல், இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. அந்த வீடியோ இணையதளத்தில் வெளியானது. அந்த இருசக்கர வாகனத்தில் இருக்கும் வாகன எண் என்னுடையது. இந்த விஷயம் படக்குழுவினருக்கு தெரியுமா? என்று எனக்கு தெரியாது.
எனினும் என் அனுமதியின்றி, என் வாகனத்தின் எண்ணை பயன்படுத்தியதற்காக, நடிகர் விக்கி கவுசல் மற்றும் படக்குழு மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.