சிதம்பரத்தில் இருக்கும் ஐயர்கள் குழந்தை திருமணம் செய்து வைப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் படி 52 ஐயர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற ஐயர்கள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீதும் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 52 ஐயர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கு விசாரித்த நீதிபதி 52 பேரையும் கைது செய்யக்கூடாது எனவும்,பி நவம்பர் 1-ம் தேதி காவல்துறையினர் இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜாமீன் மனுவை நீட்டிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
அப்போது போலீஸ் தரப்பில் பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்துவதற்கு 2 வார காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி 52 ஐயர்களையும் கைது செய்யக்கூடாது என்ற இடைக்கால தடையை நவம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்தார். மேலும் வழக்கின் விசாரணையை 2 வார காலத்திற்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.