தூய்மைப் பணியாளர்களின் குறைகளை கேட்கும் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் குறைகேட்பு ஆய்வுக் கூட்டம் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தூய்மைப் பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் தேசிய தூய்மைப்பணி ஆணையர் சார்பாக தமிழ் நாட்டுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல மாவட்டங்களில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து அதன் தொடர்ச்சியாய் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு வசிக்கும் தூய்மைப் பணியாளர்கள் அதே இடத்தில் பட்டா வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அதன் படிப்படையில் மாவட்ட கலெக்டரிடம் கலந்து ஆலோசனை செய்து அதே பகுதியில் அல்லது அருகில் உள்ள பகுதியிலேயே இடத்தை வழங்க வழி வகை செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவற்றை உடனடியாக பரிசீலனை செய்வது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதில் ஆய்வு கூட்டத்தில் ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதனால் அதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கு தேவையான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆணையத்தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதில் இந்தியா முழுவதுமாக ஒப்பந்த பணியாளர்கள் என்பதே இல்லாத வகையில் அமைய வேண்டும் எனவும், அதனைப் போல ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரப் பணியாளர்களாக அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இப்பணியை அரசு எடுத்து செய்வதன் மூலமாக அரசு கூடுதல் நிதி வர வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதனால் தூய்மைப் பணியாளர்கள் பெருமளவில் பயன் அடைவார்கள் என கூறியுள்ளனர். இது பற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்ப உள்ளதாகவும் பின் அவர்களுக்கு கர்நாடகாவில் செலுத்தப்பட்டு வரும் திட்டம் ஊதிய உயர்வை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளுமாறும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு தூய்மைப் பணியாளர்கள் படும் துன்பங்கள் மற்றும் பாதிப்புகளை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி குழுவை அமைத்து தமிழக அரசுக்கு தூய்மைப் பணியாளர்கள் ஆணையத்தின் சார்பில் கோரிக்கை வைத்ததாகக் கலெக்டர் கூறியுள்ளார்.