Categories
தேசிய செய்திகள்

இன்றோடு நிறைவு….. நாளை மறுநாள் ஓய்வு…. அடுத்தநாள் பிறந்தநாள் … ரஞ்சன் கோக்காய் ஸ்பெஷல் …!!

உச்சநீதிமன்றத்தின் தலைமை ரஞ்சன் கோக்காய் தனது கடைசி பணி நாளை முடித்திருக்கின்றார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோக்காய்_யின் பதவி காலம் என்பது நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உடன் முடிவடையும் நிலையில் , இன்றைய தினத்தோடு அவரின் பணி முடித்துள்ளது.  இன்றோடு தனது பணியினை அவர் நிறைவு செய்திருக்கிறார். இன்று காலை 10.30 மணி அளவில் தனது அலுவலக பணியை தொடர்ந்த அவர் வழக்கம் போலவே அதிரடியான பணிகளை கையாண்டு  கடைசி தினத்தையும் முடித்துள்ளார்.

பொதுவாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் போது வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது ஒரு மரபாக இருந்து வந்த நிலையில் , இவர் வெறும் பத்து நிமிடம் கூட எடுத்துக் கொள்ள வில்லை. பின்னர் வழக்கம் போல தன்னுடைய பணியை செய்தார் . மூத்த வழக்கறிஞர்கள் அவருக்கு நன்றி செலுத்தினார்கள் , அதை ஏற்றுக்கொண்டு தனது பணியை முடித்து ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் வரும் திங்கட்கிழமை அதாவது அவர் ஓய்வு பெறும் நாளுக்கு அடுத்த நாள் அவருக்கு பிறந்த நாளும் கூட. எனவே இந்த பிறந்த நாளை அவர்  ஏற்கனவே குறிப்பிடபடி அனைத்து பிரச்சனைகளிலும் , அனைத்து வேலைகளிலும் கடந்து  நிம்மதியான கொண்டாடி ஒரு சுவாசக் காற்றை சுவாசிக்க போவதாகவும் அவர் வேடிக்கையாகக் கூட செய்தியாளரிடம் தெரிவித்தார்.

ஒரு கடந்த சில மாதங்களாகவே உச்சநீதிமன்றம் மிகப் பரபரப்பாக இந்நிலையில் அந்த பரபரப்புகள் அனைத்தும் அடங்கி இருக்க கூடிய நிலை தற்போது அவர் தனது பணியை முடித்துள்ளார். அசாம் மாநிலத்தில் பிறந்த இவர் வடகிழக்கு மாநிலங்கள் இருந்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வந்த முதல் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர் என்ற பெருமை பெற்றவர் ஆவார்.

1954 நவம்பர் 18ஆம் தேதி அசாம் மாநிலத்தில் பிறந்த இவர் கவுகாத்தி  உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞ்சராக தனது பணியை தொடங்கினார். பிறகு அதே நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு பஞ்சாப் , அரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர் பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளையும் , பல்வேறு சர்ச்சைகளும் சந்தித்திருந்தார். அவருக்கு எதிரான பாலியல் தொடர்பான வழக்குகள் வந்தது. அவை அனைத்துமே நீதித்துறையை சேர்த்து ஒரு கேள்விக்கு உள்ளாக்க கூடிய சூழ்நிலையில் அவர் அனைத்திலிருந்தும் வெளிவந்து தற்போது அயோத்தி உள்ளிட்ட முக்கிய வழக்குகளையும் தீர்ப்பையும் வழங்கி தனது பணியினை நிறைவு செய்திருக்கிறார்.

இதற்குப் பிறகு டெல்லி இருக்கக்கூடிய காந்தி சமாதிக்கு செல்வார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர் ஓய்வு பெற்ற பிறகு நிறைய பணிகள் கொடுப்பதற்கு தயாராக இருந்தாலும் , பணிகளை அவர்  ஏற்றுக் கொள்வாரா ? என்ற சந்தேகம் இருக்கிறது. ஊடகம் அவரிடம் பேச முற்பட்ட போது அனைத்தையும் தவிர்த்து , முதலில் அமைதியைத் தேட போவதாகச் சொல்லி இருக்கின்றார்.

Categories

Tech |