Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு; விரைவில் முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேர்வுத்துறை தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் மே மாதம் 27ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. 202 விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிகள் நடைபெற்றது.

48 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணியில் 42,981 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியானது நிறைவடைந்துள்ளது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றும் பணியானது 10 நாட்களுக்குள் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

இதனிடையே 11ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் மட்டும் அனைவரும் தேர்ச்சி என பள்ளிகல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 11ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் மட்டும் அனைவரும் தேர்ச்சி என பள்ளிகல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மீதமுள்ள பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்து நடைபெறும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |