Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதமுடன் மீண்டும் இணையும் இளம் இசையமைப்பாளர்..!!

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தனது அடுத்த படமான ‘ஜோஸ்வா இமை போல் காக்க’ படத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார், இயக்குநர் கௌதம் மேனன்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவரயிருக்கிறது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம். பல தாமதங்களுக்குப் பின் இத்திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.

Image result for கௌதம் மேனன் எனை நோக்கி பாயும் தோட்டா

படத்தின் வெளியீட்டுப் பணிகள் நிறைவடைந்ததும், அடுத்தப் படமான ‘ஜோஸ்வா இமை போல் காக்க’ படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் இயக்குநர் கௌதம் மேனன். இந்தப் படத்தினையும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமே தயாரிக்கிறது. படத்தில் ‘பப்பி’ பட நாயகன் வருண் நடிக்கிறார். ராஹே கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

Gautham Menon teams up Darbuka siva again

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில், தயாரிப்பு நிறுவனத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் படத்தின் டீஸர் வெளியானது. மேலும் படத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு இசையமைத்த தர்புகா சிவா, இந்தப் படத்திற்கும் இசையமைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Categories

Tech |