Categories
தேசிய செய்திகள்

“சமரச திட்டம்” வரி செலுத்தாதவர்களுக்கு மேலும் ஒரு மாத காலஅவகாசம்….. நேரடி வரிகள் வாரியம் தகவல்….!!

வருமானவரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் மேலும் ஒரு மாதம் விதிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் குறித்து நேரடி வரிகள் வாரியம் அறிக்கை விடுத்துள்ளது. அதில், வருமானவரி ரீதியாக குற்றங்கள் ஈடுபட்டவர்களுக்கு வழக்குகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் சமரச திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி வருமானவரி குற்றங்களில் ஈடுபட்டவர்களில் தகுதி உடையவர்கள் மட்டும் உரிய வழி மற்றும் கூடுதல் வரி செலுத்தி வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம்.

ஆனால்  பொருளாதாரக் குற்றம், பயங்கரவாத நிதி உதவி, வெளிநாடுகளில் சொத்துகுவிப்பு உள்ளிட்டவைக்கு இது பொருந்தாது என்றும் நேரடி வரிகள் வாரியம் குறிப்பிட்டுள்ளது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த திட்டம் கடந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இந்த அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நேரடி வரிகள் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |