Categories
உலக செய்திகள்

ஊரடங்கு நீக்கப்பட்டாலும் முகக்கவசம் கட்டாயம்.. தடுப்பூசித்துறை மந்திரி அறிவிப்பு..!!

இங்கிலாந்தின் தடுப்பூசி துறை மந்திரியான நதீம் ஜகாவி, பொதுவெளியில் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்தில் ஊரடங்கு விதிமுறைகள் ஜூலை 19ஆம் தேதிக்கு பின்பு நீக்கப்படுவதாக அறிவிக்கப்படவுள்ளது. எனினும் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தடுப்பூசிகள் துறை மந்திரியான நதீம் ஜகாவி தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது.

எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதற்கு காரணம் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது தான். எனவே ஊரடங்கு விதிமுறைகள் 19ஆம் தேதி தேதியிலிருந்து நீக்கப்படும் என்பதை பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதிப்படுத்துவார்.

என்றாலும் அதன் பின்பும் நாம் கவனத்துடன் இருப்பது அவசியம். உள்ளரங்குகளிலும் அடைக்கப்பட்ட இடங்களிலும் கண்டிப்பாக மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |