ஈக்வடார் நாட்டில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
ஈக்வடார் அரசு, ஐந்து வயதுக்கு அதிகமான அனைத்து மக்களுக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக்கியிருக்கிறது. எனினும், மருத்துவ ரீதியிலான காரணங்கள் உள்ளவர்கள் மட்டும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை கூறியிருக்கிறது.
அந்நாட்டில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்வதற்கு மக்கள், கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.