சீன அரசாங்கம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத தங்கள் மக்கள், பொதுவெளிக்கு செல்லக்கூடாது என்று தடை விதிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
சீன அரசாங்கம், 18 வயதுக்கு மேற்பட்ட மக்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களுக்கு செல்வதை தடை விதிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
அந்த வகையில் ஜூலை 23-ஆம் தேதிக்கு முன்பாக சுக்சியாங் நகரத்தில் வசிக்கும் அனைத்து மக்களும், முதல் டோஸ் தடுப்பூசி மட்டுமாவது போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு தெரிவித்திருக்கிறது.
அவ்வாறு தடுப்பூசி செலுத்திகொள்ளவில்லை, என்றால் அருங்காட்சியகங்கள், பள்ளிகள், நூலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற எந்த இடங்களுக்கு செல்வதற்கும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது