சென்னை அருகே தனியார் கம்ப்யூட்டர் நிறுவன இன்ஜினியர் 6 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள சிறுசேரியில் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் திருப்பூரைச் சேர்ந்த பிரபு என்கின்ற இளைஞர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த பிரபு நேற்றையதினம் திடீரென ஆறாவது மாடியில் இருந்து விழுந்து தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள் பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவருடன் பணிபுரியும் சக ஊழியரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதில் பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது யாரேனும் அவரை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார்களா ? என்ற கோணத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.