இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் உள்ள 3,090 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், 2,939 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணி, லார்சன் டர்போ நிறுவனம் மூலம் நிறைவேற்றப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிக்கும் இணைய வசதியுடன் 10 கணினிகள் உள்ளிட்ட 12 உபகரணங்களும், மேல்நிலைப் பள்ளிக்கு 20 கணினிகள் உள்பட 12 உபகரணங்களும் வழங்கப்பட்டுவருகின்றன. இதனை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்திட வேண்டும்.
மேலும், மாவட்ட அளவில் உயர்தொழில்நுட்ப ஆய்வகம் நிறுவுவதற்கு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். அக்குழுவினர் பள்ளி வாரியாக ஆய்வுசெய்து அறிக்கையில் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். பள்ளிகளில் உள்ள தொழில்நுட்ப ஆய்வகங்கள், வரையறையின்படி நிறுவப்பட்டுள்ளதா? என்பதைக் கண்காணித்து அறிக்கையளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.