Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காருக்குள் இருந்த வாலிபர்கள்…. அடையாளம் காண்பித்த டிரைவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கால் டாக்ஸி டிரைவரை தாக்கி கையடக்க கணினியை பறித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் கால் டாக்சி டிரைவரான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முகப்பேர் மேற்கு பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு வாலிபர்களை சவாரிக்காக அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் அயப்பாக்கம் பெருமாள் கோவில் பக்கத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வாலிபர்கள் காரை நிறுத்துமாறு கூறியுள்ளனர். அதன் பின் காரில் இருந்து இறங்கிய வாலிபர்கள் செந்தில் குமாரை சரமாரியாக தாக்கியதோடு, அவரிடமிருந்த கையடக்க கணினியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினரிடம் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

அதன் பின் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது செந்தில்குமார் தன்னிடம் கணினியை பறித்து சென்ற வாலிபர்கள் காருக்குள் இருப்பதை காவல்துறையினரிடம் அடையாளம் காண்பித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் முகப்பேர் பகுதியில் வசிக்கும் சரண் என்பதும், மற்றொருவர் தனியார் கல்லூரியில் படிக்கும் சஞ்சு என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |