கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கொசவம்பாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் விசைத்தறி கூலி பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி திடீரென போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் கூலி உயர்வு பிரச்சனை குறித்து விளக்கி பேசினார். இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.