சசிகலா ஆதரவுடன் டிடிவி தினகரன் தனித்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிந்து சென்னை வந்துள்ளார். இதனால் அதிமுக அரசியலில் பல்வேறு குழப்பங்களும், பரபரப்பும் நிலவி விருக்கின்றது.
இந்நிலையில் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் ஸ்லீப்பர் செல்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றது போல பேரவை தேர்தலிலும் வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சிக்கு வருவோம் என்று டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார். இதன்மூலம் சசிகலா ஆதரவுடன் டிடிவி தினகரன் தனித்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. சசிகலா ஆதரவாக இருக்கும் சமூகம் டிடிவியை வெற்றி பெற வைக்க கடுமையாக உழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.