Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 80 கோடி பேருக்கு சலுகை – மத்திய அரசு!

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதில், ரேஷன் கடைகளில், பயனாளிகளுக்கு அரிசி கிலோ ரூ.3-க்கும், கோதுமை ரூ.2-க்கும் வழங்கப்படும், நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 80 கோடி பேருக்கு இந்த சலுகை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாவட்டம் தோறும், விரைவில் கொரோனா தொடர்பான உதவி எண்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தடை உத்தரவை மக்கள் முறையாக கடைபிடிக்க என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |