ஈராக்கில் நடந்த ராக்கெட் தாக்குதலுக்கு 5 உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் கடந்த 15 ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில் எர்பில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அமெரிக்க வீரர் உள்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு சரயா அவ்லியா அல் டம் என்ற குழு பொறுப்பேற்றுள்ளது.
இந்த குழுவிற்கு ஈரானுடன் தொடர்பு இருப்பதாக சில ஈராக் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதை ஈரான் மறுத்துள்ளது. இந்நிலையில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டமாக சேர்ந்து இந்த ராக்கெட் தாக்குதலை கடுமையாகக் கண்டிக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை பொறுப்பேற்க வைக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஈராக் அரசாங்கத்தின் விசாரணையை இந்த ஐந்து நாடுகளும் ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.