Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்டதை கண்டித்தும்… கோரிக்கைகளை வலியுறுத்தியும்… தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரு தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கம்பம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தலித் அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்படுவதை தடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் கல்யாணசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் லெனின், ஆதித்தமிழர் பேரவை நகர பொறுப்பாளர் குமரவேல், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அண்ணாமலை, விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயராஜ், சிறுபான்மையினர் நல குழு மாவட்ட செயலாளர் நாகராஜன், ஜனநாயக வாலிபர் சங்க துணை செயலாளர் மணியரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |