டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 11 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆணுறைகள் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் HIV-க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிம்பிக்கில் பாரம்பரியமாக ஆணுறை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.